நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு தேவையான நிதியை வழங்குவதில் பெரும் சிக்கல் காணப்படுகின்றது என்று நிதி அமைச்சின் செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு நேற்று (பெப்ரவரி 17) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
நிதி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டபோது அவர்கள் இதைத் தெரிவித்தனர் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.
அரச செலவினங்களை மட்டுப்படுத்தி வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைய, நாட்டின் அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று நிதி அமைச்சின் உயர் அதிகாரிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளனர்.
அவை தவிர, ஏனைய அத்தியாவசியமற்ற செலவுகளுக்கான ஒதுக்கீடுகளுக்கு நிதி அமைச்சரின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என மற்றுமொரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனால் தேர்தலுக்கு தேவையான நிதியை பெற்றுக்கொடுப்பதில் சிக்கல் காணப்படுகின்றது என்று நிதி அமைச்சின் செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளார்.