பொதுஜன பெரமுன அமைப்பின் நெடுந்தீவுக் கிளையினால் இன்றைய தினம் (ஜீலை 16) பால்மா உட்பட தலா 1000.00 பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
தற்போதைய கொவிட் 19 மற்றும் ஏனைய காரணங்களால் நெடுந்தீவில் 06 கிராம சேவையாளர் பிரிவிலும் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் 50 குடும்பங்கள் தேர்வு செய்யப்பட்டு இன்றைய தினம் J/01 முதல் J/04 வரையான கிராம சேவையாளர் பகுதிகளில் இவ் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
ஏனைய இரண்டு கிராம சேவையாளர் பகுதிகளிலும் நாளைய தினம் இவ் உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்படவுள்ளன.
கௌரவ பசில் இராஜபக்ஷா அவர்கள் நிதி அமைச்சராக பதவியேற்றமையினை நினைவு கூரும் முகமாக நெடுந்தீவினை சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத அன்பர் ஒருவர் இவ் ஐம்பதினாயிரம் ரூபா நிதியினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ் உலர் உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வில் பொதுஜன பெரமுன கட்சியின் தீவக இணைப்பாளரும் வனஜீவராசிகள் திணைக்கள அமைச்சின் இணைப்பு செயலாளருமான திரு.மா.பரமேஸ்வரன் அவர்களும் நெடுந்தீவு அமைப்பாளர் திரு.பற்றிக் றொஷான் அவர்களும், நெடுந்தீவு பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் திரு.எ.அருந்தவ சீலன் அவர்களும் மற்றும் நெடுந்தீவு பொலிஸ் பொறுப்பதிகாரி அவர்களும் கலந்து கொண்டனர்