நெடுந்தீவில் 28 பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் மற்றும் 350 பேருக்கு சமைத்த உணவு பார்சல்களும் வழங்கி வைப்பு.
பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபகரும் பிரான்ஸ் சர்வதேச தமிழ் வானொலி (ITR) பணிப்பாளருமாகிய திரு விசு செல்வராசா அவர்களின் நெறிப்படுத்தலில் நெடுந்தீவை பூர்வீகமாக கொண்டவரும் பிரான்ஸ் Saint Denis ல் வசித்தவருமான காலஞ் சென்ற செல்வி நாகநாதர் நாகம்மா (பிஞ்சுமணி) அவர்களின் 31ஆம் நாள் நினைவு நாளான நேற்று (July 10) இச் செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
அறக்கட்டளையின் இலங்கை நிர்வாக கிளைத் தலைவர் நா.தனேந்திரன், செயலாளர் இ.சற்குருநாதன், பொருளாளர் T.யோசேப், செஞ்சிலுவை சங்க நெடுந்தீவு கிளை தலைவரும் நெடுந்தீவு பலநோக்கு கூட்டுறவு சங்க தலைவருமான E.P.சீலன், அறக்கட்டளையின் உறுப்பினர் N.விந்தன் கனகரட்ணம் சமூக சேவையாளர் யோசேப் ஆகியோர் இணைந்து இச் செயற்றிட்டத்தினை மேற்கொண்டனர்
கனடா மொன்றியலில் வசிக்கும் ராஜன் சிவலோகநாதன் குடும்பத்தின் நிதி அனுசரணையில் உணவு பொருட்கள் அடங்கிய பொதிகள் மற்றும் சமைத்த உணவு பார்சல்கள் நெடுந்தீவில் பொது மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டதோடு அன்னாரின் ஆத்ம சாந்திக்காக இறை வழிபாடும் இந்து ஆலயத்தில் பூஜை வழிபாடும் ஏற்பாட்டுக் குழுவால் நடைமுறைப்படுத்தப்பட்டது.
கொவிட் 19 சுகாதார பாதுகாப்பு முறைகளுக்கு அமைவாக பெண் தலைமைத்துவ குடும்பங்கள் தென்னிந்திய திருச்சபை பகற்பராமரிப்பு நிலையத்திற்கு அழைக்கப்பட்டு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், மதிய உணவுப் பார்சல்கள் முச்சக்கர வண்டியில் நேரடியாக வீடுகளுக்கு கொண்டு சென்று வழங்கப்பட்டது.