உடுவில் பிரதேச செயலர் பிரிவு முடக்கநிலை நீக்கம்!
உடுவில் பிரதேச செயலர் பிரிவில் அமுலாகியிருந்த முடக்க நிலை தளர்த்தப்படுவதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் இன்று ஞாயிற்றுக்கிழமை(13) இரவு அறிவித்துள்ளார்.
இதேவேளை, ஏற்கனவே சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்கள் தொடர்ந்தும் 14 நாட்கள் சுயதனிமைக்கு உட்படுத்தப்படுவர் எனவும் அவர் கூறியுள்ளார்.