உடுவிலில் 36 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read
சுன்னாகம் ஆலடிப் பகுதியில் 36 போதை மாத்திரைகளுடன் 29 வயதுடைய நபர் ஒருவர் நேற்று (ஏப்ரல்7) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இராணுவப் புலனாய்வு  பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, சுன்னாக  பொலிஸாருடன்  இணைந்து நடாத்திய தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த நபர் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அவர் பயணித்த மோட்டார் சைக்கிளும்  கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் சுன்னாகம்  பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். குறித்த நபர் நீண்ட காலமாக  போதை மாத்திரை  விற்பனையில்  ஈடுபட்டு வந்ததாக தெரியவருகின்றது.
Share this Article