இளவாலை வருத்தப் படாத வாலிபர் சங்கத்தால் கற்றல் உபகரணம் கையளிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

அம்பாறை மாவட்டத்தில், காரைதீவு பகுதியைச் சேர்ந்த 100 மாணவர்களுக்கு தலா 3 ஆயிரம் ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் இளவாலை வருத்தப் படாத வாலிபர் சங்கத்தால் வழங்கப்பட்டது.

புதிய கல்வியாண்டுக்கு செல்லும் வடக்கு, கிழக்கு மாகணங்களைச் சேர்ந்த தேவையுடைய ஆயிரம் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் விசேட செயற்திட்டத்தின்கீழ் இவை வழங்கப்பட்டன.

ஆண்டுதோறும் வடக்கு மற்றும் கிழக்கு மாகணங்களை சேர்ந்த ஆயிரம் மாணவர்களுக்கு, புதிய கல்வியாண்டு ஆரம்பிக்க முன்னதாக கற்றல் உபகரணம் வழங்கும் விசேட திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Share this Article