இளவாலையில் பெரும் நிதிப் பங்களிப்பில் உள்ளகவிளையாட்டு அரங்கு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

இளவாலை மக்கள் ஒன்றியத்தின் பிரதான நிதிபங்களிப்புடன், அதன் ஸ்தாபகர் அமரர் மோகனின் நினைவாக, உள்ளகவிளையாட்டு அரங்க நிர்மாணப்பணிகள் துரித கதியில் இடம்பெற்றுவருகிறது.

இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினரால் அவர்களது நிலப்பரப்பில் இந்த நிர்மாணப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இளவாலை பிரதேச விளையாட்டு வீரர்களுக்கும், பாடசாலைகளுக்கும் பயிற்சிகளமாக, இளைஞர் யுவதியினரின் உடற்பயிற்சி கூடமாகவும் கரப்பந்தாட்டம், பூப்பந்தாட்டம், மேசை பந்து, கரம், சதுரங்கம் ஆகியவற்றின் பயிற்சி கூடமாகவும் இது அமையவுள்ளது.

இளவாலை பிரதேசத்திற்கே பெரும் வரப்பிரசாதமாக இது அமையவுள்ளது.

Share this Article