இளம் குடும்பப் பெண் நேற்று சுட்டுக்கொலை!-கணவன் தலைமறைவு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட் டுள்ளார். இந்தச் சம்பவம் அனுராதபுரம், கெக்கிராவை பிரதேசத்தில் நேற்றிரவு(ஒக்ரோபர் 16) இடம்பெற்றுள்ளது.

25 வயதுடைய தாரகி குணரட்ன அமரசேன என்ற பெண்ணே அவரது வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

குடும்பத் தகராறு காரணமாக இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

உயிரிழந்த பெண்ணின் கணவன் தலைமறைவாகியுள்ளார் என்று தெரிவித்துள்ள பொலிஸார், அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

Share this Article