இலங்கை மத்திய வங்கியின் வட்டி விகித உயர்வு தொடர்பில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

வட்டி விகிதங்களை இந்த ஆண்டில் மேலும் உயர்த்த வேண்டிய அவசியமில்லை என இலங்கை மத்திய வங்கி கருதுவதாக மத்திய வங்கி ஆளுநர் பி. நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

2.9 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தின் கீழ் பொருளாதாரம் மீண்டு வருகின்றது

மேலும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதோடு, பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாக இல்லாத வகையில் நாணயக் கொள்கையைப் பராமரிப்பதே இதன் நோக்கமாகும் என்றும் கூறப்படுகின்றது.

பணவீக்கம் தற்போதைய மட்டங்களிலேயே உச்சத்தை எட்டி, அடுத்த ஆண்டில் 5 சதவீத இலக்கை நோக்கி மீண்டும் குறையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் போரினால் தூண்டப்பட்ட பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக, மூன்று ஆண்டுகளுக்கும் மேலான காலத்தில் தனது முதல் அதிகரிப்பாக கடந்த மே மாதத்தில் 100 அடிப்படைப் புள்ளிகள் வட்டி உயர்வைக் கொண்டுவந்து மத்திய வங்கி சந்தைகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நடவடிக்கை சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் இடம்பெறும் மீட்சியில் அதன் அறிவுறுத்தலில் தெரிவு செய்யப்பட்ட ஆபத்தான வழிமுறையாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பணவீக்கம் 7 சதவீதமாக உயரும் என மத்திய வங்கி எதிர்பார்த்ததால், மே மாத வட்டி உயர்வு ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எடுக்கப்பட்டது என்றும், தற்போதைய பணவீக்கம் எதிர்பார்க்கப்பட்ட பாதையிலேயே உள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கூறியுள்ளார்.

இதேவேளை, மே மாத வட்டி அதிகரிப்பின் முழுமையான தாக்கம் பொருளாதாரத்தில் வெளிப்பட 12 முதல் 18 மாதங்கள் வரை ஆகும் என்றும், அடுத்த ஆண்டின் முதலரை பகுதியில் பணவீக்கம் மத்திய வங்கியின் 5 சதவீத இலக்கிற்கு மீண்டும் திரும்பும் வாய்ப்புள்ளதாகவும் ஆளுநர் கூறியுள்ளார்

Share this Article
Leave a comment