இலங்கை கணக்காய்வு சேவை ஆணைக்குழுவின் உறுப்பினராக ஞானானந்தராஜா தேவஞானன்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாக கொண்ட திரு. ஞானானந்தராஜா தேவஞானன் என்பவர் இலங்கை கணக்காய்வு சேவை ஆணைக்குழுவின் உறுப்பினராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையிலுள்ள ஆணைக் குழுக்களில் கணக்காய்வு சேவை ஆணைக்குழுவும் ஒன்றாகும். இவ் ஆணைக்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை ஐந்து ஆகும். ஒருவர் தமிழராவர். இவர்களின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகளாகும்.

அரசியலமைப்பு பேரவையின் சிபார்சிற்கு அமைய இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் அரசியலமைப்பின் உறுப்புரை 153 (அ) 1ம்பந்திக்கு அமைய ஜனாதிபதியால் இந்த நியமனம் வழங்கப்படுகிறது.

திரு .தேவஞானன் அவர்கள் அரச சேவையில் 37 வருடங்கள் சேவை ஆற்றியவர். வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் தேசிய கணக்காய்வு தலைமை அலுவலகத்திலும் பிரதிக் கணக்காய்வாளர் நாயகமாக பதவிவகித்துள்ளார்.

Share this Article