இலங்கையில் கோவிட் -19 நோய்த் தொற்றால் 22ஆவது நபரும் உயிரிழந்துள்ளார்.
பாணந்துறை ஆரம்ப வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 27 வயதுடைய ஆண் ஒருவரே நேற்றுமுன்தினம் (ஒக்.31) சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.
அவருக்கு கோவிட் -19 நோய் உள்ளமை இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுவரை நாட்டில் 11 ஆயிரத்து 60 பேர் கோரோனா தோற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4 ஆயிரத்து 905 பேர் சுகமடைந்துள்ளனர். 22 பேர் உயிரிழந்துள்ளனர்.