நாட்டில் இறப்புவீதம் படிப்படியாக அதிகரித்து வருவதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளி விபரத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த 2 வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளிலேயே குறித்த தகவல் வெளியாகியுள்ளதாக, மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
2012 ஜூலை முதல் 2013 ஜூன் வரை இலங்கையில் பதிவான இறப்புகளின் எண்ணிக்கை 125.626 ஆக பதிவாகியுள்ள போதிலும், 2022 ஜூன் முதல் 2023 ஜூன் வரை இலங்கையில் நிகழ்ந்த இறப்புகளின் எண்ணிக்கை 190,600 என்று தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய 2022 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டில் இலங்கையின் சராசரி வருடாந்த சனத் தொகை வளர்ச்சி குறைந்துள்ளதாகவும் அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.
மக்கள் தொகை கணக்கெ டுப்பு மற்றும் புள்ளிவிபரத்திணைக்களத்தின் கூற்றுப்படி, பிறப்பு எண் ணிக்கை படிப் படியாகக் குறைந்து, இறப்பு எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது.
எவ்வாறாயினும், இறப்புவீதம் அதிக ரிப்பதற்கான காரணம் கண்டறியப்படவில்லை. மேலும் இந்த நாட்டில் கொவிட் பரவியதன் பின்னர் இந்த நிலைமை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கொவிட் தடுப்பூசி குறித்து பல்வேறு தரப்பினரிடையே பல்வேறு கருத்துகள் இருந்தாலும், இது தொடர்பாக இதுவரை குறிப்பிட்ட தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
இதேவேளை, உலகில் சராசரியாக வருடாந்த இறப்பு வீதம் 15 வீதத்திலி ருந்து 45 வீதத்திற்கு இடையே ஒரு வீதத்தினால் அதிகரித்துள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது