இலங்கையை சேர்ந்த போதைப்பொருள் வியாபாரி, குண்டுதாரி மற்றும் கொலைக் குற்றம்சாட்டப்பட்ட ஐந்து பேருக்கு குவைத் அரசாங்கம் மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது.
குவைத்தின் மத்திய சிறைச்சாலையிலேயே இந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக குவைத்தின் அரசு தரப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட டுள்ளது.
மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ஐவரும் வெவ்வேறு குற்றங்களுக்காக பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை பெற்று வந்தனர். பிரசித்திபெற்ற ஷியா மகுதியில், 2013 ஆம் ஆண்டு தொழுகை வேளையின் போது குண்டுவெடிப்பு சம்பவம் இடம்பெற்றது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளி, கொலைக்குற்றம் சாட்டப் பட்ட மூவர் மற்றும் இலங்கையைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் என ஐந்து பேருக்கே இவ்வாறு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குவைத் கடந்த நவம்பர் மாதத்தில் ஏழு கைதிகளுக்கு மரண தண்டனை விதித்தது. குவைத் மற்றும் பிற வளைகுடா நாடுகள் கொலை மற்றும் வன்முறையற்ற போதைப் பொருள் தொடர்பான குற்றங்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுகிறன.
மேலும் சவூதி அரேபியா இந்த ஆண்டின் முதல் பாதியில் 61 பேருக்கும், 202 இல் 196 பேருக்கும் மரணதண்டனையை நிறைவேற்றியமையும் குறிப்பிடத்தக்கது.