ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு வழங்கும் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை 2027 ஆம் ஆண்டு டிசெம்பர் 31ஆம் திகதிவரை மேலும் 4 ஆண்டுகளுக்கு நீடிக்க ஐரோப்பிய ஆணைக்குழு நேற்றுத் தீர்மானித்துள்ளது.
இந்த வரிசலுகை எதிர்வரும் டிசெம்பர் மாதம் 31ஆம் திகதியுடன் முடிவடையவுள்ள நிலையில், வரிச் சலுகையை மேலும் 4 ஆண்டுகளுக்கு நீடிக்க ஐரோப்பிய ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
புதிய ஜிஎஸ்பி பிளஸ் முறைமை தொடர்பான கலந்துரையாடல்கள் தொடரும் அதேவேளை, இலங்கை போன்ற நாடுகள் முன்னுரிமை வரிச் சலுகைகளை இழக்காது என ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டில் இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்துக்கு 3.2 பில்லியன் யூரோ மதிப்பிலான ஏற்றுமதிகளை செய்துள்ளது என்று இலங்கையில் உள்ள ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதி அலுவலகம் தெரிவித்துள்ளது.