இறைவரி திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு..!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

2025/2026 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்வதற்கு, தனது மின்னணுச் சேவைத் தளம் தற்போது திறக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் (IRD) அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள பொது அறிவிப்பில், நிறுவன வருமான வரி , கூட்டாண்மை வருமான வரி, தனிநபர் வருமான வரி மற்றும் எளிமைப்படுத்தப்பட்ட தனிநபர் வருமான வரி அறிக்கை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ், வரி செலுத்துவோர் தங்களது வருமான வரி அறிக்கைகளை மின்னணு முறையில் சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

025/2026 மதிப்பீட்டு ஆண்டுக்கான அனைத்து வருமான வரி அறிக்கைகளும், 2026 நவம்பர் 30ஆம் திகதிக்குள், IRD-யின் மின்னணு சேவை தளத்தின் ஊடாக கட்டாயம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

சட்டரீதியான கடமைகளைப் பின்பற்றுவதுடன், தேவையற்ற சிரமங்களைத் தவிர்ப்பதற்காக, குறித்த காலக்கெடுவுக்குள் வருமான வரி அறிக்கைகளை தாக்கல் செய்யுமாறு அனைத்து வரி செலுத்துவோரிடமும் உள்நாட்டு இறைவரி திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், வருமான வரி அறிக்கைகளை தாக்கல் செய்யும் நடைமுறை தொடர்பான புதுப்பிக்கப்பட்ட தகவல்கள் மற்றும் வழிகாட்டுதல்களை அறிந்து கொள்ள, உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தைப் பார்வையிடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

“சிறந்த எதிர்காலத்திற்கான வரிகள்” என்ற முன்முயற்சியின் கீழ், டிஜிட்டல் சேவைகளை விரிவுபடுத்தி, வரி நிர்வாகத்தை மேலும் மேம்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Share this Article
Leave a comment