இறந்த நிலையில் சடலம் கண்டுபிடிப்பு

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு 06ம் வட்டாரம் சிக்கிரியாம் பள்ளம் பாடசாலைக்கு அண்மித்த பகுதியில் இருந்த பழைய கட்டிடத்தில் இறந்து அழுகிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. நான்கு ஐந்து நாட்களுக்கு முன்னராக மரணமடைந்திருக்க வேண்டும் என அறியப்படுகின்றது

துர்ணாற்றம் வீசியதை தொடர்ந்து மக்கள் சென்று பார்வையிட்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதன் அடிப்படையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள் ஆயினும் சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் சடலத்திற்கு அருகில் மது போத்தல் மற்றும் சிறிய பை ஒன்றும் காணப்படுகின்றது


சுமார் 50 வயது மதிக்கத்தக்கவராக காணப்படுவதுடன் வெளியூரை சார்ந்தவராக இருக்கலாம் என சந்தேகிக்க்பபடுகின்றது. பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Share this Article