இறந்த நிலையில் காணப்பட்ட ஆணின் சடலம் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நேற்றைய தினம் (ஆகஸ்ட் 03) நெடுந்தீவு 06ம் வட்டாரம் சீக்கிரியாம் பள்ளம் பாடசாலைக்க அருகாமையில் 60 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் உருக்குலைந்த நிலையில் துர்நாற்றம் வீசிய நிலையில் காணப்பட்டு பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

அதன் அடிப்படையில் இன்றைய தினம் ஆகஸட் 04 சம்பவ இடத்திற்கு வருகைதந்த தடவியல் பொலிசார் மற்றும் மரணவிசாரணை அதிகாரிகள் ஆகியோர் மேலதிக விசாரணைகளை நடாத்தியதுடன் சடலம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது

குறித்த நபர் தொடர்பான தகவல்கள் எதுவும் பெறப்படாத நிலையில் சடலம் அடையாளம் காணப்படவில்லை நெடுந்தீவை சார்ந்தவர் அல்ல எனவும் ஆனால் ஏன் எப்போது நெடுந்தீவுக்கு வந்தார் என்ற எந்தவித தகவலும் பெறப்படாத நிலையில் யாழ்ப்பாண பொது மாவட்ட வைத்தியசாலையில் உறவினர்கள் அடையாளம் காணும் பொருட்டு பிரதேச அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

Share this Article