பதுளையிலிருந்து கண்டிக்கு சென்ற தனியார் பேருந்து இன்று (25) மாலை 4.00 மணியளவில் விபத்திற்குள்ளானது.
துன்ஹிட பகுதியில் பாறையுடன் பேருந்து மோதியதில் 16 பயணிகள் காயமடைந்து பதுளை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் ஒரு பிக்கு மற்றும் நான்கு பெண்கள் அடங்குவதாக பதுல்ளை பொலிசார் தெரிவித்தனர்.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பஸ்ஸைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதால், கீழ்நோக்கிச் செல்வதைத் தடுக்க பாறையை நோக்கி பேருந்தை செலுத்தியதாக சாரதி கூறினார்.