இனத்தினுடைய அடையாளங்களை அடுத்த சந்ததிக்கு கடத்துவதே பண்பாட்டு விழாக்கள்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

ஓர் இனத்தினுடைய அடையாளம்   மொழி, கலாசாரம் மற்றும் பண்பாடுகள்ஆகியவற்றை அடுத்த சந்ததிக்கு கடத்துவதையே நோக்காக கொண்டு பண்பாட்டு  விழாக்கள் அமைகிறது  என நேற்றையதினம் (ஒக். 03) இடம்பெற்ற 2025 ஆம் ஆண்டிற்கான யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பெருவிழாவில்  யாழ் அரசாங்கஅதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் தனது உரையின்போது…

தமிழர்களின் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களை வெளிப்படுத்தும் விதமாக இன்றைய பண்பாட்டு விழா அமைந்துள்ளததாககுறிப்பிட்டதுடன், இப் பண்பாட்டு விழாவின் நோக்கம் ஓர் இனத்தினுடையஅடையாளம்   மொழி, பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை அடுத்த சந்ததிக்குகடத்துவதையே நோக்காக கொண்டு இவ் விழாக்கள் அமைந்துள்ளதாகவும்தெரிவித்தார்.

மேலும், பல்வேறுபட்ட தேவைப்பாடுகளையுடைய  கலைஞர்களை அடையாளம்கண்டு கௌரவிக்கப்பட வேண்டும் எனவும் அதற்காகவே  யாழ் முத்து விருது ,

இளங்கலைஞர் விருது வழங்கி  கெளரவிப்பதும், ஆக்கத்திறன் போட்டிகளில்வெற்றி பெற்றவர்களை கௌரவிப்பதும், யாழ்பாணம் நூல்  4 இதழ்வெளியிடுவதும் எமது பண்பாடுகளை வெளிப்படுத்தி நிற்பதாகவும் அரசாங்கஅதிபர் தெரிவித்தாார்.

கலை,மொழி,  கலாசார, பண்பாட்டு விழுமியங்கள் கட்டிப்பாதுகாக்கப்படவேண்டும் என்றும் அந்த அருமருந்தன்ன பணியினைமேற்கொண்டு அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்கின்ற அரிய பணியினைபண்பாட்டு விழாவாக நாடத்துவதாகவும் அத்தகைய பணியினை காலம் தோறும்தொடர்வதற்கு தோளோடு தோள் கொடுப்பதற்கு மாவட்ட செயலகம் தயாராகஉள்ளது எனவும், அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும்தெரிவித்தார்.

Share this Article