இந்திய துணைத்தூதுவரிடம் யாழ்.மீனவர்கள் மனுக் கையளிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாாணம் மாவட்டக் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன பிரதிநிதிகள் இந்திய துணைத்தூதுவரை இன்று (பெப்ரவரி 27) சந்தித்து கலந்துரையாடினர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் துணை தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனை சந்தித்த மீனவர் சங்க பிரதிநிதிகள் மனு ஒன்றைக் கையளித்ததுடன், வடக்கு மாகாண மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடினர்.

இந்திய கடற்றொழிலாளர்களின் நாட்டுப் படகுகளுக்கு இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித் தொழிலை மேற்கொள்வதற்கான அனுமதியை இலங்கை அரசு வழங்கவுள்ளது என்று வெளிவந்த செய்திகள் தொடர்பில் மீனவர் சங்க பிரதிநிதிகள் இந்தியத் துணைத் தூதுவருடன் கலந்துரையாடியுள்ளனர்.

Share this Article