பகிர் இலக்கிய வட்டம் நடாத்தி வரும் இணைய வழி கலந்துரையாடல்களின் ஓர் அங்கமாக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 30.05.2021 ஓர் இணைய வழி கலந்துரையாடலினை நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளனர்
இக்கலந்துரையாடலில் தீவக கல்வி வளர்ச்சியில் அமெரிக்கன் மிஷன் பாடசாலையின் பங்கு, கிராம சபைத் தலைவர்கள் வரிசையில் உயர்திரு.இராமநாதர் சுப்ரமணியம், உயர் திரு.மருதையினார் கணபதிப்பிள்ளை ஆகியோரை குறித்தும், கவிதைகள் தீவகப்பார்வையில் எனும் தொனிப்பொருள்களில் இடம் பெறவுள்ளது.
இவ்விடயங்கள் பற்றிய கடந்த கால நிகழ்கால மற்றும் எதிர்கால சமூகங்கள் அறிந்து கொள்ளவும் தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள விரும் நம் நெடுந்தீவு உறவுகள் அனைவரையும் பகிர் இலக்கிய வட்டத்தினர் அன்புடன் வரவேற்று நிற்கின்றனர் .