இசை நிகழ்ச்சிக்காக கொழும்பு சென்ற வல்வெட்டித்துறை இளைஞன் சடலமாக மீட்பு!!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

கொழும்பு துறைமுக நகர கடலில் மிதந்த நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துறைமுக நகரக் கடலில் சடலமொன்று மிதப்பதாக பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த கொழும்பு துறைமுக பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

உயிரிழந்தவர் யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி, குறித்த இளைஞர் கடந்த 28 ஆம் திகதி துறைமுக நகர வளாகத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வருகை தந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

இசை நிகழ்ச்சிக்கு வந்தவர் எவ்வாறு கடலில் சடலமாக மீட்கப்பட்டார் என்பது தொடர்பில் மர்மம் நீடிக்கிறது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், மரணத்திற்கான காரணம் விபத்தா அல்லது வேறு ஏதேனும் காரணங்களா என்பது குறித்து கொழும்பு துறைமுக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share this Article
Leave a comment