புத்தளத்திலிருந்து காங்கேசன்துறை மற்றும் மன்னாரின் ஊடாக முல்லைத்தீவுவரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழமான மற்றும் ஆழமற்றகடற்பரப்புகளுக்கு கடற்றொழிலாளர்களை செல்ல வேண்டாம் எனஎச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும் தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்ததாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு, வடமேற்கு திசையில் வடக்குஇலங்கைக்கு அருகில் தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து செல்லும் எனவானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அவ் வகையில் திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை மற்றும் மன்னார்ஊடாக புத்தளம் வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது மழை பெய்யும்.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சில இடங்களில் மழை அல்லதுஇடியுடன் கூடிய மழை பெய்யும்.திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறைமற்றும் கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பரப்புகளில் காற்றுவடகிழக்கிலிருந்து வடமேற்கு திசைக்கு மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில்வீசக்கூடும்.
திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை ஊடாக புத்தளம் வரையானகடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரையிலும், புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக காலிவரையான கடற்பரப்புகளில் மணிக்கு 50 கிலோ மீற்றர் வரையிலும் வீசக்கூடும்.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றின் திசை மாறுபடுவதுடன்காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் வரைகாணப்படும்.
புத்தளத்திலிருந்து மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவுவரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழமான மற்றும் ஆழமற்றகடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகவும் காணப்படும்.
புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பரப்புகள்அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகவும் காணப்படும்.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புக்கள் மிதமானதாககாணப்படும்.இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்றுவீசுவதுடன், மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தைக் குறைப்பதற்குப்பொதுமக்கள் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல்திணைக்களம் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.