ஆசைப்பிள்ளை ஏற்றத்தில் நான்குவாகனங்கள் மோதி மூவர் படுகாயம் , பலி

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிருசுவில் பகுதியில், ஏ-9 வீதியில் நேற்று (ஓகஸ்ட் 10) மாலை 7.00 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில் நான்குவாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி பெரும் சேதமடைந்தன. இந்த விபத்தில்மூவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை இவ் விபத்தில் திருகோணமலை அலஸ்தோட்டத்தை பிறப்பிடமாகவும் யாழ் கொடிகாமத்தில்திருமணம் முடித்து வாழ்ந்து வரும் 5 பிள்ளைகளின் தந்தையான குணரெட்னம் றொபின்சன் (வயது36) எனும் குடும்பஸ்தரே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சிப் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப்பயணித்துக்கொண்டிருந்த கார் ஒன்று, யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சிநோக்கிச் சென்றுகொண்டிருந்த டிப்பர், கூலர் வாகனம் மற்றும் மோட்டார்சைக்கிள் ஆகியவற்றுடன் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. நான்குவாகனங்களும் மோதியதால் வீதியின் நடுவே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

விபத்தில் சிக்கிய வாகனங்கள் கடுமையாகச் சேதமடைந்தன. படுகாயமடைந்தமூவர் உடனடியாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம்போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

விபத்துக்கான காரணம் குறித்து கொடிகாமப் பொலிஸார் மேலதிகவிசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Article