ஆசிரிய இடமாற்ற விண்ணப்பம் கோரல்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் ஆசிரியர் சேவையின் வருடாந்த இடமாற்றம் 2024 விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் இவ் ஆசிரிய சேவை இடமாற்றமானது வலயத்திற்குள்ளான இடமாற்றம், வலயங்களுக்கிடையிலான இடமாற்றம் மற்றும் மாகாணங்களுக்கிடையிலான இடமாற்றம் என மூன்று முறையில் இடம்பெறவுள்ளது.

இவ் இடமாற்றத்திற்கு தகுதியானோர் தமது விண்ணப்பத்தினை எதிர்வரும் 15 ஆம் திகதி அன்றோ அல்ல அதற்கு முன்பாக தமது அதிபரூடாக வலயக் கல்வி அலுவலகத்திற்கு அனுப்புதல் வேண்டும் எனவும் விசேட தேவை மற்றும் மருத்துவ காரணங்களுக்காக விண்ணப்பிப்போர் உரிய ஆவணங்களை இணைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article