ஆசிரியர் விடுதிக்கு நீர்த்தொட்டி மற்றும் நீரிணைப்பு செயற்பாடு மேற்கொள்ளப்பட்டது

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு அனைத்துலக பல்துறை இணைப்பகத்தால் (டெல்ஃப் பீப்பிள்ஸ்) அமைப்பினரால் நெடுந்தீவு மகாவித்தியாலத்தில் கல்வி கற்பிக்கும் வெளீயூர் ஆசிரியர்கள் தங்கும் விடுதிக்கான நீர்த் தொட்டி வழங்கப்பட்டதுடன் அதற்கான இணைப்பினை பெற்றுக் கொள்வதற்காக நிதியாக ரூபாய் 20,000.00 பணமும் நெடுந்தீவு மகாவித்தியாலய அதிபர் திரு.ஏகாம்பரம் சச்சிதானந்தம் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

நெடுந்தீவு மாணவர்களின் கல்விச் செயற்பாட்டில் ஈடுபடும் வெளீயூர் ஆசிரியர்களின் தங்குமிடத்தில் நீர்;வசதியின் தேவைகுறித்து பாடசாலையின் அதிபர் அவர்களினால் கோரப்பட்ட விண்ணப்பத்திற்கு அமைவாக நீர்;த்தொட்டியும் அதற்கான இணைப்பிற்கான பணமும் நிர்வாக அமைப்பினால் வழங்கப்பட்டது இந்நிகழ்வில் அனைத்துலக பல்துறை இணைப்பகத்தின் தலைவர் செயலாளர் பொருளாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Share this Article