ஆசிரியர் கல்லூரி இறுதித் தேர்வு தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதன்படி, பட்டதாரி அல்லாத பயிற்சி ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புதேர்வை 2025 ஆம் ஆண்டு மே மாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், பரீட்சைக்கான இணையத்தளம் மூலமான விண்ணப்பங்கள், நேற்று(ஜனவரி10) முதல் எதிர்வரும் 24ஆம் திகதி வரையில் பெற்று கொள்ளப்படும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வஇணையத்தளமான www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic என்ற இணையத்தளத்திற்குச் சென்று வழங்கப்பட்டுள்ள பயனர் பெயர் மற்றும்கடவுச்சொற்களைப் பயன்படுத்தி மட்டுமே விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவேண்டும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.