அல்லைப்பிட்டி அலுமினிய தொழிற்சாலை அருகாமையிலுள்ள காணிகளில் இருந்த புதர்களுக்கு சில விசமிகள் தீ வைப்பதன் மூலம் தீவிரமான நிலை ஏற்பட்டது.
இதன் விளைவாக ஏற்பட்ட புகை மூட்டம் ஊர்காவற்றுறை–யாழ்ப்பாணம் வீதியின் போக்குவரத்தை கடுமையாக பாதித்ததுடன், அந்த வழியாக சென்ற பொதுமக்கள் சுவாசிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.
மேலும், இந்த புகை மூட்டத்தினால் மோட்டார் சைக்கிளில் சென்ற சிலர் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி, யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
சம்பவம் குறித்து பிரதேச சபைத் தவிசாளருக்கு அறிவிக்கப் பட்டு, அவரின் முயற்சியால் யாழ் மாநகர சபையின் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைவாக வரவழைக்கப்பட்டு தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், சம்பவம் நடைபெற்ற இடத்தை மாவட்ட மேலதிக அரச அதிபர் கை.சிவகரன் நேரில் சென்று பார்வையிட்டதும் குறிப்பிடத்தக்கது.