வேலணை – அல்லைப்பிட்டி பகுதிகளில் ஆயிரக்கணக்கான பனம் விதைகள் நட்டும் பசுமை முயற்சி இன்று (ஒக் 17) மேற்கொள்ளப்பட்டது.
தீவகத்தின் அடையாளமான பனைமரங்களை பாதுகாக்கவும், சுற்றுச்சூழல் பசுமையை மேம்படுத்தவும், நன்னீர் வளங்களை காக்கவும் நோக்கமாகக் கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.
அல்லையூர் இளைஞர்கள் முன்னெடுத்த இந்த செயற்றிட்டம், வேலணை பிரதேச செயலகம் மற்றும் வேலணை பிரதேச சபையின் அனுசரணையுடன் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர்கள், கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டு பனை விதைகள் நட்டனர்.