அலுவலக பணிகளுக்கு மேலதிகமாக மனிதநேயப் பணிகள் – யாழ். மாவட்டச் செயலர் அறிவுரை!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

அரச உத்தியோகத்தர்கள் தமது அலுவலகப் பணிகளுக்கு அப்பால் பொதுமக்களுக்கான மனிதாபிமான பணிகளை ஆற்றுவதற்கு முன்வரவேண்டும் என்று யாழ் மாவட்டச் செயலர் அ.சிவபாலசுந்தரன் தெரிவித்தார்.

நல்லூர் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற அரச உத்தியோகத்தர்களுக்கான வினைத்திறண் தடைகாண் பரீட்சைக்கான வழிகாட்டல் செயலமர்வில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தற்போது யாழ்.மாவட்டத்தில் குருதித் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் அரச பணியாளர்கள் குருதிக்கொடை செய்ய முன்வரவேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்தார்.

அரச உத்தியோகத்தர்கள் அலுவலக நேரங்களில் மக்கள் சேவையில் கண்ணும் கருத்துமாக இருக்கவேண்டும். உத்தியோகத்தர்கள் அலுவலகங்களில் வீண் பொழுது போக்குகின்றார்கள் என்ற எண்ணம் மக்கள் மனங்களில் ஏற்படக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Share this Article