அரசியலுக்கு இனி வரப்போவதில்லை!- கோட்டாபய ராஜபக்ஷ கூறுகிறார்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

தான் மீண்டும் அரசியலுக்கு வரவுள்ளதாக வெளியாகும் தகவல்களை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிராகரித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் அரசியலுக்குள் வரவுள்ளார் எனவும், அதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன எனவும் வெளியாகியுள்ள தகவல்கள் தெற்கு அரசியலில பேசுபொருளாக மாறியுள்ளன.

இந்த நிலையில் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோட்டாபயவை நேரில் சந்தித்து, இது பற்றி வினவியுள்ளனர்.

இதற்கு பதிலளித்த கோட்டா, அரசியலுக்கு ஒரு தடவை வந்தேன், ஒதுங்கினேன். அதிகாரத்தை தக்கவைக்க வேண்டும் என்பது அல்ல என் நோக்கம். மீண்டும் அரசியலுக்கு வரும் அளவுக்கு வாழ்க்கையில் பக்குவம் இல்லாத நபர் நான் அல்லன் எனக் குறிப்பிட்டார்.

Share this Article