அரசடிப்பகுதியில் நேற்று 26 பேருக்கு கொரோனா

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நல்லூர் ஜே/103 கிராம சேவகர் பிரிவில் உள்ள அரசடிப்பகுதியில் நேற்று மேற்கொண்ட பரிசோதனையில் 26 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தலில் உள்ள கிராமமான அரசடிப் பகுதியில் இருந்து நேற்றைய தினம் 156 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு நேற்று மேற்கொண்ட பரிசோதனையின் பெறுபேறு இன்று வெளியாகியது.

இவ்வாறு மேற்கொண்ட 156 பேருக்கான பரிசோதனையில் 26 உறுதி செய்யப்பட்ட அதே நேரம் 106 பேருக்கு மீண்டும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அறிக்கையிடப்பட்டுள்ளதனால் மேலும் பலருக்கு கொரோனாத் தொற்று இருக்கலாம் என கருதப்படுகின்றது.

Share this Article