அம்மாச்சி உணவகம் திறப்பு – வேலணை பிரதேச பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார முன்னேற்ற திட்டம்.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

வேலணை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்குடன், பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ஒதுக்கப்பட்ட மூன்று மில்லியன் ரூபா நிதி பங்களிப்பில் அமைக்கப்பட்ட “அம்மாச்சி உணவகம்” நேற்று (ஒக். 02) திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஜெயசந்திரமூர்த்தி ரஜீவன், யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. கயிலாயப்பிள்ளை சிவகரன், வேலணை பிரதேச செயலாளர் திரு. தனபாலசிங்கம் அகிலன், பிரதேச சபை தவிசாளர் அசோக்குமார், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் செயலக உத்தியோகத்தர்கள் பங்கேற்றனர்.

Share this Article