விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் புதிய செயலாளராக யாழ்ப்பாண மாவட்ட செயலர் கணபதிப்பிள்ளை மகேசன் இன்று (டிசம்பர் 27) நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது யாழ் மாவட்ட செயலாளராக கடமை ஆற்றி வருகின்ற மகேசன் அடுத்த வருடம் ஜனவரி முதல் அமைச்சின் செயலாளராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் மகேசனுக்கு இடமாற்றம் வழங்கப்படுவதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் தற்போது அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.