2020ம் ஆண்டு நடைபெற்ற புலமைப்பரிசில் பரிட்சையில் நெடுந்தீவு கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளில் தோற்றி சித்தி பெற்ற மூன்று மாணவர்களுக்கும் மறைந்த முனனாள் பல நோக்கு கூட்டுறவுச் சங்க ஊழியர் அமரர் நாகலிங்கம் ஆறுமுகம் ஞாபாகமாக புலமைப்பரிசில் ஊக்குவிப்புத் திட்டம் வழங்கப்பட்டது.
இதற்கமைவாக 189 புள்ளிகளைப் பெற்று நெடுந்தீவு பிரதேசத்தில முன்னிலை பெற்ற சீக்கிரியாம் பள்ளம் அ.த.கபாடசாலை மாணவி செல்வி கபிலன் சுவிற்றி அவர்களுக்கு ரூபாய் 20,000.00 பணப்பரிசு சீக்கிரியாம் பள்ளம் அ.த.கபாடசாலையில் வைத்து வழங்கப்பட்டது.
அதே போல் நெடுந்தீவு றோ.க.மகளிர் கல்லூர்pயில் கற்று இரண்டாம் மூன்றாம் நிலைகளில் சித்தி பெற்ற தனபாலன் சிஜானுஜா 176 புள்ளிகள் செல்வன் கலிஸ்ரஸ் கபில்சன் 161 புள்ளிகள் ஆகிய இருவருக்கும் தலா ரூபா 15,000.00 வீதமும் வழங்கி வைக்கப்பட்டது.
சிறந்த முறையில் குறிப்பிட்ட புள்ளிகளுக்கு மேல் பெற்று வெற்றி பெற்ற 03 மாணவர்களுக்கும் புலமைப்பரிசில் பரிட்சை முடிவுகள் வெளிவந்தவுடனேயே தானகவே தொடர்பு கொண்டு அமரர் நாகலிங்கம் ஆறுமுகம் குடும்பத்தின் சார்பாக கனடாவில் வசிக்கும் அவரது மூத்த மகன் திரு.ஆறுமுகம் குகன் அவர்கள் திரு.தி.கிரிதரன் ஊடாக இவ்வுதவித்திட்டத்தினை உடனடியாக வழங்கி மாணவர்களை ஊக்குவித்துள்ளார்
இதே போல் கடந்த வருடமும் நெடுந்தீவில் புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தியடைந்த சைவப்பிரகாச வித்தியால மாணவி செல்வி சயந்தன் ரட்சா அவர்களுக்கு ரூபாய் 50,000.00 நாகலிங்கம் ஆறுமுகம் ஞாபகமாக வழங்கி வைக்கப்பட்டதுடன் தொடர்ச்சியாக நெடுந்தீவில் கல்வி கற்று சித்தியடைகின்ற மாணவர்களுக்கு தன்னால் முடியுமானவரை தொடர்;ச்சியாக உதவி செய்வதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.