நெடுந்தீவு மேற்கு உயரப்புலம் ஐயனார் ஆலய பங்குதாரரும் சமுக சேவகருமாகிய அமரர் கந்தைய காங்கேசு அவர்கள் இவ்வுலகை விட்டு மீளத்துயில் கொண்டுள்ளார் இவரும் இவரது குடும்ப அங்கத்தவர்களும் பல்வேறு சமூகப்பணிகளையும் சமயப் பணிகளையும் மேற்கொண்டுள்ளார்
இவரது சேவைக்கு மதிப்பளித்து நெடுந்தீவு தெற்கு விவசாயிகள் சங்கத்தினரின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (ஜீலை 27) கடலரிப்பை தடுக்கும் நோக்கில் வெல்லைக் கடற்கரையில் 25 மரங்கள் நாட்டப்பட்டன.
நெடுந்தீவு தெற்கு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அவர்களது தலமையில் இடம் பெற்ற நிகழ்வில் அமரர் கந்தையா காங்கேசு அவர்களின் ஆத்மா சாந்தி வேண்டிய மௌன இறைவணக்கத்துடன் பாடசாலை மாணவர்களால் முதலாவது மரக்கன்று நாட்டி வைக்கப்பட்டது.
தொடர்ந்து இந் நிகழ்வில் கலந்து கொண்ட பிரதேசசபை தலைவர், பிரதேச சபை உறுப்பினர்கள், சமூக மட்ட அமைப்பின் பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் என அனைவரும் மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டன.
மரக்கன்று நாட்டி ஆரம்பித்து வைத்த பாடசாலை மாணவனுக்கு முருகைக்கன்றும் வழங்கி வைக்கப்ட்டது.
தற்போதைய கொவிட் 19 நிலைமையினைக் கருத்திற் கொண்டு எளிய முறையில் கொவிட் பாதுகாப்பு நிலைமைகளைக் கருத்திற் கொண்டு மரக்கன்றுகள் நடும் செயற்பாடு இடம் பெற்றுள்ளது