அனலைதீவு மற்றும் எழுவைதீவு பிரதேசங்களின் கல்வி மேம்பாட்டுக்குஎடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல்வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர்செயலகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (செப். 16) நடைபெற்றது.

இதன்போது அனலைதீவு மற்றும் எழுவைதீவில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கானவசதிகளை அதிகரித்தல் மற்றும் கடல்கடந்த தீவுகளில் பணியாற்ற விரும்பும்ஆசிரியர்களின் விவரங்களை சேகரித்தல் போன்ற விடயங்கள் ஆராயப்பட்டதுடன்வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் குறித்த இரு தீவுகளுக்கும் நேரடியாகச்சென்று பார்வையிட்ட பின்னர் எவ்வாறான வகையில் திட்டங்களைமுன்னெடுப்பது என்ற அறிக்கையை கையளிக்கப்படவுள்ளது.
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களைஇலக்குவைத்து முதல் கட்ட நடவடிக்கைகளை ஆரம்பிப்பது எனக்கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது. தொடர் நடவடிக்கைகளை மாகாணக்கல்விப் பணிப்பாளர், பிரதேச செயலகம் இணைந்து முன்னெடுக்கக் கூடியதாகஇருக்கும் என்றும் கருத்தும் முன்வைக்கப்பட்டது.
கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர்,
இந்தப் பிரதேசங்களைச் சேர்ந்த புலம்பெயர் தேசங்களில் வதியும் சிலர்தன்னார்வமாக இந்த முயற்சியில் இணைந்துள்ளனர். கடந்த காலங்களிலும்இவ்வாறான முயற்சிகள் எடுக்கப்பட்டிருந்தாலும் எதிர்பார்க்கப்பட்ட பெறுபேறுகள்அடையமுடியவில்லை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். நம்பிக்கைக்குரியவர்களை உள்வாங்கி தொழில்முறை ரீதியான குழுவைஅமைத்து, எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை திட்டமிட வேண்டும். அதேநேரம் கட்டுமானங்களால் மாத்திரம் கல்வியை மேம்படுத்த முடியாது. இதயசுத்தியுடன் பணியாற்றினால் மாத்திரமே இதில் மாற்றங்களைஉருவாக்கலாம் என குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண பிரதிப்பிரதம செயலாளர் – நிர்வாகம், வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர், ஊர்காவற்றுறை பிரதேச செயலர், கோப்பாய் பிரதேச செயலர் மற்றும் இந்தமுயற்சியில் தன்னார்வமாக பங்கெடுப்பவர்களும் கலந்துகொண்டமை சுட்டிக்காட்டத்தக்கது.