அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இழுவைப் படகும் 10 இந்திய மீனவர்களும் கைது!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டிய இந்திய இழுவை படகையும் பத்து மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய இழுவை படகுகளை விரட்டுவதற்கான விசேட நடவடிக்கையை இலங்கை கடற்படையினர் நேற்று முன்தினம் அதிகாலை (ஓகஸ்ட் 7 ) மேற்கொண்டனர்.

முல்லைத்தீவு அலம்பில் தீவு கடற்பரப்பில் அத்துமீறீய இழுவை மீன்பிடியில் ஈடுபட்ட பத்து இந்திய மீனவர்களுடன் இழுவைப் படகு கைப்பற்றப்பட்டது.

10 இந்திய மீனவர்களுடன் அத்துமீறிய மீன்பிடி படகு திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு, அவர்கள் இலங்கை கடலோர காவல்படை ஊடாக திருகோணமலை உதவி கடற்றொழில் இயக்குனரகத்திடம், சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Share this Article