அனலைதீவு எழுவைதீவு பிரதேசங்களுக்கு செல்வதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பபட்டுள்ளது.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

அனலைதீவு எழுவைதீவுற்குள் நுழைவதற்கு உள்ளுர் வாசிகள் தவிர்ந்தோருக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதுடன் படகுச் சேவையில் 20 – 30 மாத்திரமே பயணிக்க முடியும். படகோட்டிகளுக்கு மாதந்தம் பி.சீ.ஆர் பரிசோதனை கட்டாயம்.

இன்றைய தினம் (டிசம்பர் 15) பிரதேச செயலகத்தில் நடைபெற்ற படகு சேவை உரிமையாளர்கள் படகோட்டிகளுடன் கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தீவுகளில் தனிமைப்படுத்த நேரிடும் போது சுகாதார, மருத்துவ போக்குவரத்து வசதிகளை உடனடியாக வழங்குவதில் உள்ள இடர்பாடுகளை கருத்திற் கொண்டும் உள்ளுர் மக்களின் பாதுகாப்பு கருத்திற் கொண்டும் மேற்படி தீர்மானம் இன்று மேற்கொள்ளப்பட்டது.

அத்தியாவசியமாக பணிக்கு செல்லும் உத்தியோகத்தர்கள், மற்றும் மரணச் சடங்கிற்கு மகன் மகள் உள்ளிட்ட நெருங்கிய உறவுகள் செல்வதற்கு விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது,

தொற்று ஏற்படின் கடல் கடந்த தீவுகளில் ஏற்படக்கூடிய மிகுந்த நெருக்கடி நிலமைகளைக் கட்டுப்படுத்தும் நோக்குடனேயே சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பிரதேச செயலாளர் இணைந்து இம் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டதாகவவும் தெரிவிக்கப்படுகின்றது.

Share this Article