ஊர்காவற்றுறை – மெலிஞ்சிமுனையில் உள்ள நீர்நிலைகள் சீரமைக்கும் பணிகள் இன்று (ஒக்.03) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இதன் தொடக்கமாக மெலிஞ்சிமுனையில் உள்ள முதலைக்களிக்குளத்தை சீரமைக்கும் பணிகள் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

இந்த குளத்தினை தூர்வாரி அணைகள் அமைத்து குளத்தினில் பரவியுள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றி, இந்த குளத்தில் மழை நீரை சேமிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
“அடுத்த தலைமுறைக்காக தண்ணீர்” எனும் தாரக மந்திரத்துடன் நன்னீர் சேகரிப்புக்கான குளங்களை வெட்டும் நிகழ்வினை தமிழ்நாட்டைச் சேர்ந்த சூழலியலாளர் நிமல் ராகவன் அவர்களின் ஏற்பாட்டில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இது தமிழ்நாட்டைச் சேர்ந்த சூழலியலாளர் நிமல் ராகவன் அவர்களின் நன்னீர் சேகரிப்புக்கான 276 ஆவது நீர்நிலை இது என்பது குறிப்பிடத்தக்கது.