அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் டெங்கு ஒழிப்புச் செயற்றிட்டம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

யாழ் மாவட்ட டெங்கு ஒழிப்புத் திட்டத்தின் வலிகாமம் கிழக்குப் பிரதேச செயலகத்தின், அச்சுவேலி தெற்கு கிராம சேவையாளரின் ஒழுங்கமைப்பில் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த ஆரம்ப நிகழ்வில், சிரமதான நிகழ்வு, வீடு வீடாக சென்று களதரிசிப்பு மேற்கொள்ளல் என இரண்டு பிரிவுகளாக இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கோப்பாய் பிரதேச செயலாளர் சுபாஜினி மதியழகன், வலி கிழக்கு பிரதேச சபை செயலாளர் எஸ் பகீரதன், அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எல்.யு. பிரியந்த, 521 படைப்பிரிவின் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்ட அதிகாரி சில குருசிங்க, அச்சுவேலி தெற்கு கிராம சேவையாளர் அனுசன் , அபிவிருத்தி உத்தியோகத்தர் ஞானமாலா , பகுதி பிரதேச பொது சுகாதார பரிசோதகர் சால்ஸ் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Share this Article