ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்க கடற்படை முற்றுகையை ஏற்படுத்தியுள்ளதாகவும், அந்த நீரிணை மீது அமெரிக்கா முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஈரான் அணு ஆயுதம் அல்லது அணுக்கதிரியக்க அழுக்கு குண்டு தயாரிப்பதை அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது என ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
ஈரானுடனான பேச்சுவார்த்தையின் முடிவைப் பொறுத்தே பெட்ரோல் விலைகள் அமையும் என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்கள் ஈரான் விதித்துள்ள நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என ஈரான் வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், அமெரிக்காவுடன் ஈரான் ஒப்பந்தம் செய்துகொள்ள விரும்பினாலும், வோஷிங்டனுக்கு ஏற்ற நிபந்தனைகளை ஏற்கத் தயாராக இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்