ஹட்டன் ஓயாவில் அடித்துச் செல்லப்பட்ட லொறி மீட்பு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

ஹட்டனில் இருந்து மகாவலி கங்கைக்கு நீர் பாயும் பிரதான ஆறான ஹட்டன் ஓயா பெருக்கெடுத்ததன் காரணமாக, வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட லொறி ஒன்று மரத்தில் சிக்கியிருந்த நிலையில், அதன் உரிமையாளரால் இன்று (10/11) அதிகாலை கண்டுபிடித்துள்ளார்.

ஹட்டன் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக, ஹட்டன் ரொதேஸ் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்று நேற்று (09/11) மாலை 5:00 மணியளவில் திடீரென ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டதுடன் ஹட்டன் ஓயா பெருக்கெடுத்ததால், ரொதேஸ் பகுதியின் தாழ்நிலப் பகுதிகளில் அமைந்திருந்த சுமார் 50 வீடுகள் வெள்ள நீரில் மூழ்கியதாகப் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

Share this Article
Leave a comment