நாளை 30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளது.
ஹஜ் பெருநாளை முன்னிட்டு இந்த விடுமுறை வழங்கப்படவுள்ளது என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
குறித்த விடுமுறை தினத்துக்குப் பதிலாக அடுத்த மாதம் 8 ஆம் திகதி நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளும் இயங்கும் என்றும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.