வேலணை பிரதேச சபையின் செயலாளர் தலைமையில் இன்று (செப். 26) சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களினால் பிளாஸ்ரிக் கழிவுகள் அகற்றும் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை முழுவதும் 1000 பிளாஸ்டிக், பொலித்தீன் போன்ற உக்க முடியாதகழிவுகளினை சேகரிக்கும் செயற்றிட்டத்தினை மேற்கொள்வதற்கு பொதுநிர்வாகஉள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சின்அறிவுறுத்தலுக்கமைவாக இத் திட்டம் வேலணை வெண்புரவி நகர் மற்றும்வெண்புரவி நகர் கடற்கரை பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது பிளாஸ்டிக், பொலித்தீன் போன்ற உக்க முடியாத கழிவுகளிள் சேகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.