வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையில் பொலிஸாரால் விழிப்புணர்வுச் செயற்பாடு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யா/வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையில் வீதி ஒழுங்கு தொடர்பான விழிப்புணர்வுச் செயற்பாடு மே 23 அன்று காலைப்பிரார்த்தனையின் போது கல்லூரி அதிபரின் தலைமையில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையப் போக்குவரத்துப் பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது குறித்த விழிப்புணர்வுச் செயற்பாடு முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியம், விபத்துக்களின் போது மாணவர்கள் அதிகளவு பாதிக்கப்படுகின்ற சந்தர்ப்பங்கள் வீதிப்போக்குவரத்து சட்டதிட்ட விதிகள், மாணவர்கள் வீதி ஒழுங்கில் பின்பற்றவேண்டிய நடைமுறைகள் என்பன பற்றி விளக்கியதோடு இறுதியில் மாணவர்களிடம் கருத்துக்களும் வினாவப்பட்டது.

இதில் தரம் 6 முதல் 13 வரையிலான அனைத்து மாணவர்களும் பங்குபற்றி பயன்பெற்றனர்.

Share this Article