வெளிநாட்டு பொதியை எடுக்கச் சென்றவர் போதைப் பொருள் தடுப்பு பிரிவினரால் கைது

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

வெளிநாட்டு பொதியை எடுக்கச

வெளிநாட்டில் நாட்டில் இருந்து வந்த பொதியை பெறுவதற்காக சென்ற மூதூரைச் சேர்ந்த இளைஞன் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலை தபால் நிலையத்திற்கு பெல்ஜியம் நாட்டில் இருந்து அனுப்பப்பட்டிருந்த பொதியை பெறச் சென்ற மூதூர் ஆலய வீதியைச் சேர்ந்த (வயது 26) என்ற இளைஞனை திருகோணமலை துறைமுக பொலிசார் கைது செய்து போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர். இச்சம்பவம் புதன்கிழமை (ஒக்.22) மாலை இடம்பெற்றுள்ளது.

பெல்ஜியம் நாட்டில் இருந்து வரும் குறித்த பொதியை பெற்றுக் கொள்ளுமாறு டுபாயில் வசிக்கும் மூதூர் ஜாயா நகரைச் சேர்ந்த நபரால் குறித்த நபருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து திருகோணமலை பிரதான தபால் நிலையத்திற்கு வந்து பொதியை பெற்றபோது சுங்க அதிகாரிகளின் பரிசோதனையில் அதில் 6 கிலோகிராம் நிறையுடைய மெண்டி என்ற போதைப்பொருள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து குறித்த நபர் துறைமுக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இரண்டு பொதிகளில் குறித்த போதைப்பொருள் இருந்ததாகவும் பெல்ஜியம் நாட்டில் இருந்து அஞ்சல் மூலமாக திருகோணமலை தபால் நிலையத்திற்கு மூதூர் பகுதியைச் சேர்ந்த குறித்த நபரின் பெயருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்ததாகவும் இதனது பெறுமதி சுமார் பல கோடி ரூபாவிற்கு மேல் இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலதிக விசாரணைகளை போதைப்பொருள் தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Article