வெற்றிலை துப்பியதால் கொரோனா தொற்று? : தனிமைப்படுத்தப்பட்ட குடும்பம்!
கொரோனா தொற்றுக்குள்ளானவர்களை ஏற்றிச்சென்ற பேரூந்தில் இருந்து ஒருவர் வெற்றிலை துப்பியதால் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த குடும்பத்தினர் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
பலாங்கொட, சமனலவேவாவில் அமைந்துள்ள கொரோனா தொற்று சிகிச்சை நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த பேரூந்தில் இருந்து கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணொருவர் எச்சில் துப்பியுள்ளார்.
இதனால் குறித்த பேரூந்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தவர்கள் பாதிக்கப்பட்டனர்.
இதனையடுத்து 119 எனும் பொலிஸ் அவசர இலக்கத்திற்கு செய்யப்பட்ட முறைப்பாட்டினையடுத்து மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.