வெடுக்குநாறிமலையில் விக்கிரகங்களை மீள பிரதிஷ்டை செய்வதில் தாமதம்

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

வெடுக்குநாறிமலையில் மீள விக்கிரங்களை உடனடியாக பிரதிஷ்டை செய்ய முடியாது என்று அமைச்சர்களான ஜீவன் தொண்டமான், டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் அடங்கிய குழு தெரிவித்துள்ளது.

அண்மையில் வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயமும் தெய்வச்சிலைகளும் அடையாளம் தெரியாதவர்களால் உடைக்கப்பட்டிருந்தது. அங்கு நிலைமைகளை ஆராய அமைச்சர்கள் அடங்கிய குழு அங்கு சென்றிருந்தது.

நேரில் சென்று நிலைமைகளை ஆராய்ந்த பின்னரே அந்தக் குழு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் நீதிமன்றத்தில் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சட்டத்துக்கு மதிப்பளித்து, தீர்ப்பு வெளியான பின்னர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர்கள் அடங்கிய குழு தெரிவித்துள்ளது.

Share this Article