விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பில் சித்தார்த்தன் கலந்துரையாடல்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read
யாழ்ப்பாணம் இளவாலை வடக்கு  கமக்கார அமைப்பிற்குட்பட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் நேற்று (மே 27)  கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இதன்போது இந்தப் பகுதி விவசாயிகள் எதிர்நோக்கும் தனியார் கம்பனி ஒன்று எமது பிரதேசத்தில் இருந்து அதிகளவான கிணற்றில் இருந்து    நீரை ஐஸ் உற்பத்திக்காக எடுத்து செல்வதால் தமது விவசாயக் கிணறுகள் அதிகளவாக நீர் மட்டம் குறைவதாகவும் எதிர்காலத்தில் உவர் நீராக மாறும் சாத்தியம் காணப்படுகிறது.
எமது பிரதேசத்தில் அதிகளவான விவசாயிகள் கொடி முந்திரிகை செய்கையை மேற்கொண்டு வருவதால் அச் செய்கையும்  பாதிப்படைந்து வருகின்றது.
அத்தோடு நீர் அகத்துறஞ்சப்படும் கம்பனியையும் பாராளுமன்ற உறுப்பினர் பார்வையிட்டு கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
அத்தோடு 200 மேற்பட்ட கொடி முந்திரிகை செய்கையாளர்கள், ஏனைய செய்கையாளர்களும் பாதிப்படைந்து வருவதாகவும் பாராளுமன்ற உறுப்பினருக்கு தெரியப்படுத்தினர். இதன் பின்னர் இது தொடர்பான கோரிக்கை  கடிதம் ஒன்று பாராளுமன்ற உறுப்பினரிடம் வழங்கி வைக்கப்பட்டது.
மேட்டுநில செய்கையாளர்களுக்கு உரம் மானியமாக வழங்கப்படுவதில்லை எனவும் கருத்து தெரிவிக்கின்றனர். பாராளுமன்ற உறுப்பினர் இவ்விடையத்தை உரிய அமைச்சருடன் பேசி முடிவு எடுத்து தருவதாகவும் கருத்து கூறினார்.
கலந்துரையாடலில் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பாலச்சந்திரன் கயதீபன் இளவாலை  வடக்கு விவசாயிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
Share this Article